நேற்று மாலை நிலவரப்படி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
பிரேசில், மெக்சிகோ, பெரு, சிலி ஆகியன கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரேசிலில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 906 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதில், 52 ஆயிரத்து 960 பேர் அதற்கு பலியாகி உள்ளனர்.
மெக்சிகோவில் வைரஸ் தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 410 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 377 ஆகவும் அதிகரித்துள்ளது.
பெருவில் கொரோனா தொற்றால் 2 லட்சத்து 60 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டதில், இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 404 ஆக உள்ளது. சிலி நாட்டில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 767 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 4ஆயிரத்து 505 ஆகும்.