ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் சோதனை தடுப்பூசியை இரண்டு தடவைகளாக பன்றிகளிடம் பரிசோதித்த போது அவற்றிடம் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி பெரிய அளவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனத்திற்காக கொரோனா தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அந்த தடுப்பூசியை, பிரிட்டனின் பிர்பிரைட் ஆராய்ச்சி அமைப்பு பன்றிகளிடம் சோதித்து பார்த்தது. அதில் முதலில் ஒரு டோசும் அதற்குப் பிறகு பூஸ்டர் டோசும் அளிக்கப்பட்டபோது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் ஆய்வுகள் தொடரப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு இரண்டு டோசுகள் கொடுத்தால் நோய் பாதுகாப்பு கிடைக்கும் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.