சோங்கிங் ஜிபெய் பயாலஜிகல் புரோடக்ட்ஸ் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரொனா தடுப்பூசியை மனிதர்களிடம் சோதித்துப் பார்ப்பதற்கான அனுமதியை சீன அரசு வழங்கி உள்ளது.
அன்ஹுய் ஜிபெய் லாங்கோம் சீன நுண்ணணுவியல்துறை ஆகியனவும் இந்த கண்டுபிடிப்பில் இணைந்து ஈடுபட்டன. தடுப்பூசியை, மனிதர்களிடம் நடத்துவதற்காற கிளினிகல் சோதனைக்கு சீனாவின் தேசிய மருந்துப் பொருட்கள் நிர்வாகத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவில் மனிதர்களிடம் சோதித்துப் பார்க்கக் கூடிய 6 தடுப்பூசி சோதனைகள் நடந்து வருகின்றன. இவை தவிர ஒரு டஜனுக்கும் அதிகமான தடுப்பூசி சோதனைகள் பல நாடுகளில் பல்வேறு ஆய்வுக் கட்டங்களில் உள்ளன.