பணிக்கான H1B, H4 விசாவை நிறுத்தி வைத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்தத் தடையை இந்த ஆண்டு இறுதி வரைநீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவில் 5 லட்சத்துககும் அதிகமான வேலை வாய்ப்புகள் உள்நாட்டு மக்களுக்கு கிடைக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெளியில் இருந்து சேவைகளைப் பெறுவதற்கான அவுட்சோர்சிங் பணிகள் முழுவதும் நிறுத்தப்படுவதற்கும் அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதிகமான ஊதியம் பெறும் வேலைகள் யாவும் அமெரிக்க மக்களுக்கே கிடைக்க வேண்டும் என்றும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஜே 1 விசாக்களும் இனி கொரோனாவை குணப்படுத்த முன்வரும் மருத்துவர்களுக்கு தான் வழங்கப்படும் என்றும் அமெரிக்கா புதிய கெடுபிடிகளை அறிவித்துள்ளது.