உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதுவரை 48 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெருந்தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 4 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் மட்டும் 23 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 1 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கடுத்தபடியாக 2ம் இடத்திலுள்ள பிரேசிலில் 10 லட்சத்து 86 ஆயிரம் பேரும், 3ம் இடத்திலுள்ள ரஷ்யாவில் 5 லட்சத்து 92 ஆயிரம் பேரும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் 4 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளுடன் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், பெரு, சிலி, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகளவிலான பாதிப்புகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.