இந்தியா - சீனா இடையே எழுந்துள்ள மோதலை கட்டுப்படுத்த சமரச முயற்சிக்கு உதவத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.
வாஷிங்டனில் பேசிய அவர், இந்தியா -சீனா எல்லை விவகாரத்தால் மிகவும் கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இரு நாடுகளின் தலைமையுடன் அமெரிக்கா அரசுமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும், இருநாடுகளுக்கும் உதவ முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் சமரசத்திட்டத்தை ஏற்கனவே இந்தியா நிராகரித்தது. சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் சமரசம் செய்து வைக்க தயார் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.