ஜெர்மன் மருந்து நிறுவனமான CureVac கொரோனா தடுப்பூசி சோதனையை மனிதர்களிடம் துவக்கி உள்ளது. University of Tuebingen ல் நடக்கும் இந்த சோதனையில் 18 க்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு ஆய்வு நடத்தப்படுகிறது.
இந்த சோதனையின் முதலாவது முடிவுகள் இரண்டு மாதங்களில் கிடைக்கும் என ஜெர்மன் செய்தி நிறுவனமான ஃபோகஸ் ஆன்லைன் தெரிவித்துள்ளது.
மனிதர்களிடம் நடத்தப்படும் இந்த தடுப்பூசி சோதனையில், அதை மனித உடல் ஏற்கும் திறன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் எதிர்வினை உள்ளிட்டவை குறித்து ஆராயப்படும் என சோதனைக்கு பொறுப்பாக உள்ள மருத்துவ விஞ்ஞானி பீட்டர் கிரெம்ஸ்னர் கூறியுள்ளார். இந்த மருந்து நிறுவனத்தின் சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்குவதாக ஜெர்மன் அரசு இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.