நோபல் பரிசு பெற்ற இளம் பெண் மலாலா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட திட்டம் எதுவுமின்றி நெட்ஃபிக்ஸில் பொழுதை கழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 22 வயது மலாலா யூசுப்சாய், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம் செய்ததற்காக 2014 இல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர். இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் துறையில் மலாலா தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
இதன்பொருட்டு தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ள மலாலா, தனது அடுத்தக்கட்ட திட்டம் என்ன என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நெட்ஃபிக்ஸ், வாசிப்பு, தூக்கம் என்று தற்போது பொழுதை கழிப்பதாக தெரிவித்துள்ளார்.