கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கக் கூடும் என நம்புவதாக, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களச் சந்தித்தவர், கொரோனா வைரசுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மனித பரிசோதனைக் கட்டத்தில் சுமார் 10 மருந்து மாதிரிகள் இருப்பதாகவும், அதில் குறைந்தது 3 மாதிரிகள் நம்பிக்கைக்குரிய கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி வளர்ச்சி என்பது ஒரு சிக்கலான வேலை மற்றும் ஏராளமான நிச்சயமற்ற தன்மைகளுடன் வருவதாக குறிப்பிட்டவர், பலவிதமான தடுப்பூசி மாதிரிகள் இருப்பது நல்ல செய்தி எனவும் தெரிவித்துள்ளார்.