ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கால், வேலைவாய்ப்புத்துறைக்கு ஏற்பட்ட பெரிய அடி பேரழிவுக்கு (devastating) வழிவகுப்பதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதார மந்த நிலையை சந்தித்துள்ள ஆஸ்திரேலியாவில், வேலையின்மை விகிதம் 19 ஆண்டுகளில் இல்லாத அளவு 7 புள்ளி 1 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது என்றும் இது நடப்பு ஜூன் மாதத்தில் 10 சதவீதமாக உயரும் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதத்தில் சுமார் 6 லட்சம் பேரும் மே மாதத்தில் மேலும் 2 லட்சத்து 27 ஆயிரம் பேரும் வேலையிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.