கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக 35 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக இங்கிலாந்தின் பிரபல வங்கியான ஹெ.எஸ்.பி.சி அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பணிநீக்கம், சம்பளக் குறைப்பு, சம்பள உயர்வு நிறுத்தி வைப்பு, புதிய பணியமர்த்தல் நிறுத்தி வைப்பு எனப் பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் தனது வணிகத்தில் உள்ள செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் 35 ஆயிரம் பேரைப் பணிநீக்கம் செய்வதாக ஹெ.எஸ்.பி.சி வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்நிறுவனத்துக்கு உலகம் முழுக்க உள்ள 2 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதில் புதிய பணியமர்த்தலை முடக்குவதாகவும் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நோயல் குவின் தெரிவித்துள்ளார்.
பணியிழப்புகளை காலவரையின்றி நிறுத்த முடியவில்லை எனவும், இது எப்போது முடியும் என்ற ஒரு கேள்விதான் தங்களிடமும் உள்ளது என்றும் குவின் கூறியுள்ளார்.