தென்கொரியா அதிகாரிகளுடன் பேச்சு நடத்த பயன்படுத்தப்பட்ட அலுவலக கட்டிடத்தை (liaison office ) வடகொரியா தகர்த்த வீடியோவை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
தென்கொரியாவில் இருந்து வடகொரியாவை விமர்சித்து துண்டுபிரசுரங்கள் வீசப்படுவதை நிறுத்தவில்லையெனில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்தது.
இதையடுத்து இருநாட்டு அதிகாரிகளும் சந்தித்து பேச, கேசாங்கில் (Kaesong) கட்டப்பட்ட 4 மாடி அலுவலகத்தை வடகொரியா தகர்த்துவிட்டதாக தென்கொரியா நேற்று தெரிவித்திருந்தது.
அதை உறுதி செய்யும் வகையில், வடகொரியா அரசு தொலைக்காட்சியான கேசிஎன்ஏ (KCNA), வெடி வைத்து தகர்க்கப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது.