பெய்ஜிங்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பள்ளிகள் அனைத்தையும் மூடியுள்ளதுடன், ஆயிரத்து 255 விமானங்களையும் சீனா ரத்து செய்துள்ளது.
சீனாவின் ஊகான் நகரில் முதன்முதலில் கொரோனா பரவிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டது. இப்போது இரண்டாவது அலையாகத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் கொரோனா பரவியது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் எட்டாயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் 137 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதன் காலை நிலவரப்படி பெய்ஜிங்கில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.