முடக்குவாதம் உள்ளிட்ட மூட்டு நோய்களுக்கு வழங்கப்படும் மருந்தான டெக்சாமீதசோன் (Dexamethasone), கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்ற உதவும் என பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் வென்டிலேட்டர்களில் இருந்த கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை அளித்தபோது, இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்காக குறைந்ததாகவும், கொரோனா சிகிச்சையில் இது முக்கிய திருப்புமுனையாக இருக்கும் எனவும் பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டீராய்டு மருந்தான டெக்சாமீதசான் மிகவும் விலை குறைந்த மருந்தாகும். சுமார் 5000 ரூபாய் செலவில் இந்த மருந்தை பயன்படுத்தி எட்டு நோயாளிகளின் உயிரை காப்பாற்றி விடலாம் என விஞ்ஞானிகளில் ஒருவரான மார்ட்டின் லாண்ட்ரே (Martin Landray) தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிரிட்டன் அரசு உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு டெக்சாமீதசோன் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.