உலக அளவில் கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் புதிதாக ஆட்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்ததால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இதில் மரணித்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவும், பிரேசிலும் மோசமான முதல் இடத்தைப் பிடித்துள்ளன.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 846 பேராகவும், இந்தியாவில் 2 ஆயிரத்து 6 பேராகவும் பதிவாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவில் 25 ஆயிரமாகவும், பிரேசிலில் 37 ஆயிரமாகவும் பதிவானது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில் ஆயிரத்து 300 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதேபோல் பாகிஸ்தான், பிரான்ஸ், மெக்ஸிகோ, ஈரான், பெரு, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மூன்றிலக்கத்தில் உயிரிழப்பைக் கொண்டுள்ளன.