பரவலாகப் பயன்படுத்தப்படும் டெக்ஸாமெதாசோன் எனப்படும் மருந்து கொரோனவால் ஏற்படும் உயிரிழப்பை குறைப்பதாக, இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆர்த்ரிடிஸ் போன்ற பிற நோய்களின் வீக்கத்தைக் குறைக்கப் பயன்படும் டெக்ஸாமெதாசோன், கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை மூன்றில் ஒரு பங்கு குறைப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
தொற்று நோயின் கடுமையான நோயாளிகளுக்கு மருந்து உடனடியாக தரமான பராமரிப்பாக மாற வேண்டும் என்றும், இதுதொடர்பான ஆதரங்களை மறு ஆய்வு செய்ய விரும்பவதால், விரைவில் முழு விவரங்கள் வெளியிடப்படும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.