கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் அளிப்பதை அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ரத்து செய்துள்ள நிலையில், இந்த மருந்தின் அருமை அமெரிக்க சுகாதார நிறுவனங்களுக்கு தெரியவில்லை என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.
புதிய ஆதாரங்களின் அடிப்படையில், கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து நல்ல பலனை அளிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறை திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.
இதே முடிவுக்கு வந்துள்ள பிரிட்டன விஞ்ஞானிகள், கொரோனாவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் ஹைட்ராக்சிகுளோரோகுயினுக்கு ஆதரவாக பேசி வரும் டிரம்ப், தாமும் அந்த மருந்தை எடுத்துக் கொண்டதில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.