கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின், ரெம்டெசிவர் ஆகிய இரண்டு மருந்துகளையும் சேர்த்து கொடுத்தால், ரெம்டெசிவரின் ஆன்டிவைரல் திறன் குறைந்து விடும் என அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் விருப்பத்தையும் மீறி, கொரோனா நோயாளிகளுக்கு அவசர கட்டத்தில் ஹைட்ராக்சிகுளோரோகுயினை வழங்கலாம் என பரிந்துரையை ரத்து செய்துள்ள மருந்து கட்டுப்பாட்டுத் துறை, இந்த மருந்தால் பலன் கிடைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. அதே நேரம் ரெம்டெசிவரை ஆபத்து கட்டங்களில் பயன்படுத்த கடந்த மாத துவக்கத்தில் ஒப்புதல் வழங்கியது.