அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கருப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசாரின் ஆடையில் இருந்த கேமரா பதிவும், காரில் இருந்த கேமரா பதிவும் வெளியாகி உள்ளது.
ராய்ஷார்டு புரூக்ஸ் ((Rayshard Brooks)) எனும் 27 வயது இளைஞர் வெண்டி துரித உணவகம் முன்பு, பார்க்கிங் பகுதியில் காரில் அமர்ந்தவாறே தூங்கியுள்ளார். இதனால் பாதை தடைபட்டதாக அங்கிருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார், மது போதையில் இருந்த புரூக்சை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும் கருப்பின இளைஞருக்கும் இடையே வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.
இறுதியில் போலீசார் வைத்திருந்த டேசர் எனப்படும் மின்னணு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தப்ப முயன்ற நிலையில், போலீஸ் அதிகாரியால் சுடப்படும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.