எகிப்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் அடுத்த மாதம் முதல் தேதி முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர், வெளிநாட்டு சுற்றுலாவுக்காக சர்வதேச விமானநிலையங்கள் வருகிற 1ந்தேதி முதல் திறக்கப்படும் என்றார். வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு விமானத்தின் உள்பகுதிகள், விமானநிலையங்களில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இங்கு வருவதற்கு முன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானப் போக்குவரத்தை எகிப்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.