ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்தில், தாலிபன் தீவிரவாதிகள் 222 தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாரெக் அரியன், கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் விளைவாக 422 பாதுகாப்பு படையினர் இறப்பு அல்லது காயமடைந்தனர் என தெரிவித்தார்.
மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மீது உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில், தலிபான்கள் மத அறிஞர்களை குறிவைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கடந்த வெள்ளிக்கிழமை, வாராந்திர பிரார்த்தனையின் போது காபூல் மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர்.