மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இரு வேறு கிராமங்களில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 20 ராணுவ வீரர்களும் பொதுமக்கள் 40 பேரும் உயிரிழந்தனர்.
போர்னோ மாநிலத்தின் மோங்குனோ, நங்கன்சாய் ஆகிய இரு இடங்களில் நுழைந்த தீவிரவாதிகள், ஏவுகணை உள்ளிட்ட கனரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர்.
சுமார் 3 மணி நேரம் நடந்த தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, மோங்குனோவில் காவல்நிலையத்துக்கு தீவைத்த தீவிரவாதிகள், ஐ.நா. சார்பில் இயங்கி வந்த உதவி மையத்தையும் எரித்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு, இஸ்வாப் (ISWAP) என்ற மதவாத தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.