பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடிக்கு (Shahid Afridi) கொரோனா உறுதியாகியுள்ளது.
பாகிஸ்தான் வீரர் தவ்பீக் உமருக்கு (Taufeeq Umar) அண்மையில் கொரோனா உறுதியாகி, சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். இந்த நிலையில் அப்ரிடிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவலை தெரியபடுத்தியுள்ள அப்ரிடி, தாம் கொரோனாவில் இருந்து விரைவில் குணமாக பிரார்த்திக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.