போலியோ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்து கொரோனா சிகிச்சையில் நல்ல பலனை அளிப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் ஒருபக்கம் நடைபெறும் நிலையில், மறுபக்கத்தில் ஏற்கெனவே பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்தால் அதை குணபடுத்த முடியுமா என்ற ஆய்வுகளும் நடக்கின்றன.
இதுதொடர்பான புதிய ஆய்வு முடிவு ஒன்று, மெடிக்கல் ஜர்னல் சயின்ஸ் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தற்போது பயன்படுத்தப்படும் போலியோ மருந்து நல்ல பயனைத் தருவதாகவும், அதனால் கொரோனா வராமல் தற்காலிகமாக தடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் டி.பி. சிகிச்சைக்கு அளிக்கப்படும் பாசிலஸ் கால்மேட் (Bacillus Calmette) மருந்து, கக்குவான் இருமல் ((pertussis- whooping cough)) சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் குரின் (Guérin ) ஆகியவையும் நல்ல பயனை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.