ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ள இரத்த உறைதல் எதிர்ப்பு மருந்து கொரோனா இறப்புகளை தடுக்க உதவும் என கூறப்படுகிறது.
சிட்னி பல்கலைகழகத்தின் இருதய ஆய்வு மைய விஞ்ஞானி ஷான் ஜாக்சன் (Shaun Jackson) சோதனை முயற்சியாக இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளார். இது ரத்தம் திட்டுகளாக உறைவதை தடுப்பதாக கூறப்படுகிறது.
மூச்சுத்திணறல், உறுப்புகள் செயலிழத்தல், பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்டவற்றுக்கு இரத்தம் உறைதல் காரணம் என்பதால், கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து பலனளிக்க கூடும் என அவர் தெரிவித்துள்ளார். ஐசியூ.வில் உள்ள கொரோனா நோயாளிகளில் 4 ல் 3 பேருக்கு இரத்த உறைவு ஏற்படுவதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.