பிலிப்பைன்ஸில் தீவிரவாதத்துக்கு எதிரான புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
அந்நாட்டில் வக்கீல்கள், சமூக ஆர்வலர்களின் பேச்சு சுதந்திரத்தை அடக்குவதற்கும் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டேவுக்கு எதிராக பேசுபவர்களை துன்புறுத்துவதற்கும் புதிய மசோதா வழி வகுக்கும் என எதிர்ப்பு எழுந்து உள்ளது.
இந்த நிலையில் சுதந்திர தினமான இன்று பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழக்கத்தில் மழைக்கு நடுவே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 3 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு மசோதா, அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டேவின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.