பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாடெர்னா (Moderna) பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதை அடுத்து அடுத்த மாதம் 30,000 பேரிடம் தடுப்பூசியை சோதித்துப் பார்க்க உள்ளதாகவும் அது கூறியுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்சில் இருக்கும் இந்த நிறுவனம் தனது தடுப்பூசி ஆய்வின் முதன் இலக்காக, அறிகுறிகளுடன் வரும் கொரோனா தொற்றை தடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
இரண்டாம் கட்டமாக, மக்கள் மருத்துவமனைகளுக்கு வராமல் இருக்கும் நிலையை எட்டும் நோக்கில், கொரோனாவை தீவிரமாக தடுக்கும் தடுப்பூசி உருவாக்கப்படும் எனவும் மாடெர்னா நம்பிக்கை தெரிவித்துள்ளது.