மிகவும் அபாய கட்டத்தில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு, பாதுகாப்பாக சிகிச்சை அளிக்க உதவும் ரிமோட் வென்டிலேட்டரை போலந்து நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ரெஸ்பிசேவ் (RespiSave) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கென்று பிரத்யேகமாக வடிவடிமைக்கப்பட்ட செயலி வாயிலாக, வென்டிலேட்டரில் உள்ள நோயாளியின் உடல் நிலையை மருத்துவர்களால் கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.
நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்றவாறு, மருத்துவமனையின் எந்த பகுதியில் இருந்தும் வென்டிலேட்டரின் செயல்பாடுகளை மருத்துவர்களால் கட்டுப்படுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.
அதே போன்று வென்டிலேட்டரின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ, நோயாளியின் நிலைமை மோசமடைந்தாலோ அது குறித்த எச்சரிக்கை செயலி வாயிலாக மருத்துவர்களுக்கு அனுப்பப்படும்.