கொரோனா தொற்று ஏற்படுத்தப்பட்ட குரங்குகளுக்கு, ஆன்டிவைரல் மருந்தான ரெம்டெசிவரை அளித்த போது, நுரையீரல் பாதிப்பு தடுக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்த ஆய்வு முடிவுகளை மருத்துவ இதழான நேச்சர் வெளியிட்டது. 12 குரங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுத்தப்பட்ட பின்னர், அவற்றில் 6 குரங்குகளுக்கு மட்டும் ரெம்டெசிவர் கொடுக்கப்பட்டது.
அதன் பின்னர் அவற்றை ஆராய்ந்ததில், சுவாசப் பிரச்சனை எதுவும் ஏற்படாததுடன், அவற்றின் நுரையீரல்களில் சிறிய அளவிலான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. கிளினிகல் சோதனைகளில் ரெம்டெசிவர் மருந்து மனிதர்களுக்கான கொரோனா சிகிச்சையிலும் நல்ல முன்னேற்றத்தை அளிப்பதாக கூறப்படுகிறது.