சீனாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே பரவியிருக்கக்கூடும் என ஹார்வார்டு மருத்துவக் கல்லூரி ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனாவின் ஊற்றுக்கண் என கருதப்படும் ஊகான் நகர மருத்துவமனைகளின் கார் பார்க்கிங்குகள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நிறைந்திருப்பதை சாட்டிலைட் படங்கள் காட்டின.
அதே நேரம் இருமல், வயிற்றுப்போக்கு ஆகியன குறித்து இணையத்தில் அதிக எண்ணிக்கையிலான தேடல்கள் நடத்தப்பட்டன.இவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில் கடைசியாக டிசம்பரில் கொரோனா தொற்று அறிவிக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வு தெரிவிக்கிறது.
சீனா கூறுவதைப் போல ஊகான் கால்நடைச் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று வெடிப்பதற்கு முன்னரே அது பரவத் துவங்கியிருக்கலாம் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது