கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் கொலை வழக்கில் அமெரிக்க போலீஸ் அதிகாரியின் ஜாமீனுக்கு இந்திய மதிப்பில் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் பிணைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி மின்னியாபொலிஸ் நகரில் போலீஸ் அதிகாரி டெரெக் சவ்வின் (Derek Chauvin) தனது காலால் முட்டி போட்டு ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பு இனத்தவர் கழுத்தை அழுத்தியதால் உயிரிழந்ததார்.
இது தொடர்பாக டெரெக் சவ்வின் மற்றும் மேலும் 3 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் டெரெக் சவ்வினுக்கு நிபந்தனைகளுடன் இந்திய மதிப்பில் 7 கோடியே 50 லட்சம் ரூபாயாகவும் நிபந்தனைகள் இல்லாமல் 9 கோடியே 40 லட்சம் ரூபாயாகவும் ஹென்னெபின் கவுண்டி மாவட்ட நீதிமன்றம் (Hennepin County District Court ) ஜாமீன் தொகையாக நிர்ணயித்து உள்ளது.
மேலும் வழக்கு விசாரணையை ஜூன் 29 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.