அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளால், மிகவும் அரிதாகவே நோய்த் தொற்று பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு உயரதிகாரியான மரியா வான் கெர்க்கோவ் (Maria Van Kerkhove), அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை ஆய்வு செய்ததில், தொற்று பரவியதாகக் கண்டறியப்படவில்லை என்றும், அப்படி பரவிய நிகழ்வுகள் மிகவும் அரிது என்றும் அவர் கூறியுள்ளார்.
அறிகுறி இல்லாதவர்கள் மூலம் ஏன் பரவுவதில்லை என்பதை விளக்க, இந்த விவரங்களை தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய் அறிகுறி உள்ளவர்களின் எச்சில் அல்லது சளித் திவலைகள் மூலம் வைரஸ் பரவும் நிலையில், அத்தகைய நபர்களையும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலம் நோய் பரவலை வெகுவாகக் குறைக்க முடியும் என மரியா வான் கெர்க்கோவ் ஆலோசனை கூறியுள்ளார்.