இந்தியாவுடனான எல்லையைப் பாதுகாக்கும் தரைப்படைப் பிரிவுக்கு லெப்டினன்ட் ஜெனரல் சூ கிலிங்கைப் புதிய தளபதியாகச் சீனா நியமித்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மூவாயிரத்து 488 கிலோமீட்டர் நீள எல்லை உள்ளது.
சீன ராணுவம் அடிக்கடி எல்லையைத் தாண்டி இந்திய நிலப்பகுதிக்குள் ஊடுருவுவதால் பிரச்சினை ஏற்படுகிறது. லடாக்கில் அண்மையில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தியாவுடனான எல்லையைப் பாதுகாக்கும் மேற்கு மண்டலப் படையின் தரைப்படைப் பிரிவுக்கு லெப்டினன்ட் ஜெனரல் சூ கிலிங்கைப் புதிய தளபதியாகச் சீனா நியமித்துள்ளது. தரைப்படை, விமானப்படை ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்கு மண்டலப் படைப் பிரிவின் ஒட்டுமொத்தத் தளபதியாக தற்போது சாவோ ஜோங்கி இருந்து வருகிறார்.