தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் மாமிசம் உண்ணும் சிறிய வகை டைனோசரின் புதைப் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
தெற்கு ரியோ நீக்ரோ(Rio Negro) பகுதியில் சுமார் 9 கோடி ஆண்டுகள் பழமையான ஓவரொராப்டர் என்ற வகை டைனோசரின் புதைப்படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
5 அடி நீளம் கொண்ட இந்த டைனோசர்கள் இறகுகளை கொண்டது, நீண்ட கால்களுடன் வேகமாக ஓடக்கூடியது எனக் கூறும் நிபுணர்கள், பறவைகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கான திறவுகோலை இது கொண்டிருக்கக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.