வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்ற உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாட்டின் மூலம், தடுப்பூசி கூட்டணி அமைப்பான காவிக்கு (GAVI) 66 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு உள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருங்கிணைத்த இந்த மாநாட்டில் 50 நாடுகளின் தலைவர்கள், ஐ.நா பொதுச்செயலாளர் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அடுத்த 5 ஆண்டுகளில் உலகளவில் 30 கோடி குழந்தைகளுக்கு குறைந்த செலவில் தடுப்பூசிகளை வழங்க, 55 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.
இதனிடையே, எதிர்பார்த்த அளவை காட்டிலும் கூடுதல் நிதி திரப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டு உள்ளது.