ஐஸ்லாந்து நாட்டின் துறைமுக நகரமான ஹப்னாபுஜோரூரில் உள்ள வீட்டில் இரண்டாம் உலக போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த வெடிகுண்டை பத்திரமாக கைப்பற்றினர். பின்னர் அதனை சோதித்து பார்த்ததில் அந்த குண்டு தற்போதும் வெடிக்கும் தன்மையில் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த குண்டு பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் வேறு எங்காவது குண்டுகள் புதைந்துள்ளனவா என்பது குறித்தும் சோதனை நடைபெற்றது.