தென் பசிபிக் நாடுகளில் ஒன்றான பிஜியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் பூரண குணம் அடைந்து விட்டதாக அந்நாட்டின் பிரதமர் பிராங்க் பைனிமராமா தெரிவித்துள்ளார்.
கடைசியாக பாதிக்கப்பட்ட 15பேரும் குணமடைந்து விட்டதாக தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்சமயம் எந்த உயிரிழப்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள பைனி மராமா, இதற்கு பிரார்த்தனை, கடின உழைப்பு மற்றும் அறிவியலை உறுதிப்படுத்துதலே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக பிஜி திகழ்கிறது. 9 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.