பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. யின் தலமைமையகத்திற்கு சென்றார்.
பதவியேற்ற பின் அவர் செல்வது இது மூன்றாவது முறையாகும்.இம்ரான்கானுடன் வெளியுறவு அமைச்ர் ஷா மஹ்மூத் குரேஷி மற்றும் ராணுவ உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.
அவரிடம் அதிகாரிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகள் தொடர்பான முக்கியத் தகவல்களை விவரித்ததாக கூறப்படுகிறது.
சந்திக்க வேண்டிய சவால்களையும் அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பாகிஸ்தானில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்பதற்காக இம்ரான் கான் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இறையாண்மையை விட்டுக் கொடுக்கும் சமரசத்திற்கு இடமே இல்லை என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.