இரு விண்கற்கள் இன்றும், நாளையும் பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் பேசும்போது, 2020 கே என் 5 என்று பெயரிடப்பட்ட விண்கல் 24 முதல் 54 மீட்டர் விட்டமுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கல் இன்று பூமிக்கு மிக அருகில், அதாவது, சுமார் 62 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடந்து செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 12 முதல் 28 மீட்டர் நீளமுள்ள 2020 கே ஏ 6 என்ற மற்றொரு விண்கல்லும் பூமியை நெருங்கியபடி செல்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கல் நாளையும், நாளை மறுநாளும் பூமிக்கு அருகில் வந்து செல்லும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.