கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவது தொடர்பான மருத்துவ பரிசோதனைகள், மீண்டும் தொடங்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா சிகிச்சைக்கு உலக நாடுகள் பலவும் பயன்படுத்தி வந்த நிலையில், மருத்துவ பாதுகாப்பு கருதி அவற்றின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள அந்த அமைப்பின் தலைவர் அதானோம், கிடைக்கக்கூடிய இறப்பு தரவுகளின் அடிப்படையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து மீதான சோதனைகளை நிறுத்த, எந்த காரணமும் இல்லை என நிர்வாகக் குழு பரிந்துரைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.