கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் பாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படாது என அமெரிக்காவின் Houston Methodist மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 28 ஆம் தேதி அபாய கட்டத்தில் இருந்த கொரோனா நோயாளிகள் 25 பேருக்கு, குணமடைந்த நோயாளிகளின் பிளாஸ்மா செலுத்தப்பட்டது. அதில் 19 பேரின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டதாவும், 11 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அந்த மருத்துவமனை தெரிவித்ததாக அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பேதாலஜி (American Journal of Pathology) கூறியுள்ளது.
class="twitter-tweet">அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா தெரபி சிகிச்சை வெற்றி எனத் தகவல் #US | #plasmatherapy https://t.co/2Jmdk0R0T3
— Polimer News (@polimernews) June 3, 2020