பிரேசிலில் ஒரே நாளில் 1262 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து அங்கு மொத்த இறப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 199 ஆக அதிகரித்துள்ளது.
செவ்வாய் மாலை இதை அறிவித்த பிரேசிலின் சுகாதார அமைச்சகம், நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையும் 5,55,383 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரம் தொற்று பரவல் குறைவாக உள்ளது என்ற அதிபர் ஜெயிர் போல்சோநாரோவின் தொடர் அறிவிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
பிரேசிலில் தொற்று இந்த வேகத்தில் சென்றால், 33 ஆயிரத்து 530 இறப்புகளுடன் இருக்கும் இத்தாலியை கடந்து, உலகில் 3 ஆவது அதிக மரணங்களை சந்தித்த நாடு என்ற இடத்தை பிரேசில் பெறும் என கூறப்படுகிறது.