அழகு நிலையங்களில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் தாய்லாந்தில் பிரத்யேகமாக மினி முகக்கவசம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அந்நாட்டில் கொரோனா பாதிப்பு வீதம் குறைவாக உள்ளதால் ஊரடங்கில் மூன்றாம் கட்டமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அழகு நிலையங்கள் மீண்டும் செயல்பட பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாங்காக்கில் அழகு நிலையம் ஒன்றில் நோய் பரவலை ஏற்படுத்தும் வாய் மற்றும் மூக்கை மட்டும் மூடும் வகையில் முகக்கவசம் பயன்படுத்தப் படுகிறது. இந்த மறுபயன்பாட்டு முகக்கவசத்தால் திருப்திகரமான சேவையை பெறமுடிவதாக வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.