உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64 லட்சத்தை தாண்டியுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனாவில் இருந்து சிகிச்சையில் குணமானோரின் எண்ணிக்கையும் 29 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்து 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அத்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்தை கடந்துள்ளது.
2ம் இடத்திலுள்ள பிரேசிலில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 3ம் இடத்திலுள்ள ரஷ்யாவில் 4 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது.