உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் பெரிய கொடையாளராக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்சின் கேட்ஸ் ஃபவுண்டேசன் (Gates Foundation) உருவெடுத்துள்ளது.
ஐ.நா.வின் ஒரு பகுதியான உலக சுகாதார நிறுவனத்தில், தனியார் நிறுவனம் மிகப் பெரிய கொடையாளராகவும், செல்வாக்கு மிக்கதாகவும் உருவெடுத்திருப்பது இது முதல் முறையாகும். உலக சுகாதார நிறுவனத்தின் பலம் அதன் உறுப்பு நாடுகளைக் கொண்டே கணக்கிடப்பட்டாலும், தற்போது அதன் பெரிய முதல் 10 கொடையாளர்களில் 4 மட்டுமே நாடுகளாக உள்ளன. மற்றொன்று ஐரோப்பிய ஆணையம். உலக சுகாதார நிறுவனத்தில் தனியாரின் செல்வாக்கு அதிகரித்து வருவது உலக சுகாதார நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.