இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஈரானில் ஒரே நாளில் 2979 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை வீசக்கூடும் என ஈரான் சுகாதார அமைச்சர் சயீத் நமாகி அச்சம் தெரிவித்துள்ளார். இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி அதிகபட்சமாக 2988 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அதிக எண்ணிக்கையில் தொற்று ஏற்பட்டுள்ளதால், மக்கள் கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும், இல்லையேல் மிகவும் மோசமான சூழலை சந்திக்கும் நிலை ஏற்படும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் இதுவரை 1,54,445 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 1,21,004 பேர் அதில் இருந்து குணமடைந்துள்ளனர். ஈரானில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 7878 ஆக உள்ளது.