லண்டனுக்கு அறுவை சிகிச்சைக்காக சென்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், சாலையோர ஓட்டல் ஒன்றில் அமர்ந்து தேநீர் அருந்தும் புகைப்படம் வெளியாகி உள்ள நிலையில், அவர் நாடு திரும்பி ஊழல் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்தல் தீவிரமடைந்துள்ளது.
ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நவாஸ் செரீப், இருதய அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல கடந்த நவம்பர் மாதம் ஜாமீனுடன் லாகூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உடல்நலம் தேறி பயணம் செய்ய தகுதியாக உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தப்பின் நாடு திரும்பவதாக நீதிமன்றத்தில் நவாஸ் செரீப் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் நோய் வாய்ப்பட்ட நவாஸ் செரீப் முகக்கவசம் அணியாமல், நல்ல ஆரோக்கியத்துடன் ஓட்டல் ஒன்றில் அமர்ந்துள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.