வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு படகு மூலம் பயணித்து புலம்பெயர முயன்ற 101 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
2011 ஆம் ஆண்டில் மும்மர் கடாபியின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கு பிறகு வறுமைக்கும் போருக்கும் பயந்து பொதுமக்கள், மேற்கு கடற்கரை வழியே ஐரோப்பாவுக்கு இடம் பெயருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலால் நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ள நிலையிலும், கடந்த வாரத்தில் மட்டும் ஐந்து படகுகளில் மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற 400 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மேலும் 101 பேர் கைது செய்யப்பட்டு தலைநகர் திரிப்போலிக்கு அருகே தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.