அமெரிக்காவில் கருப்பின நபரின் மரணத்தையடுத்து வெடித்துள்ள தீவிரப் போராட்டத்தால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தின் பீட்டா வெளியீட்டை கூகுள் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.
ஜூன் 3 ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடக்க இருந்த அறிமுக விழாவில், புதிய இயங்குதளத்தின் அம்சங்கள் மற்றும் விவரங்களையும் இதர சாதனங்களையும் அறிமுகம் செய்வதாக கூகுள் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருவதை காரணம் காட்டி ஆண்ட்ராய்டு 11 பீட்டா வெளியீட்டை ஒத்திவைத்துள்ள கூகுள் நிறுவனம், அடுத்தக்கட்ட தகவல்களை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.