சிங்கப்பூரில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அந்நாட்டு மக்களுக்கு முகக்கவசங்களை வென்டிங் இயந்திரங்கள் மூலம் இலவசமாக அரசு அளிக்கிறது.
அரசு சார்பில் முதலில் வீடுகள் தோறும் முகக்கவசங்கள் இலவசமாக அளிக்கப்பட்டன. இதையடுத்து தற்போது கம்யூனிட்டி சென்டர்களில் வென்டிங் இயந்திரங்களை வைத்து, அதன்மூலம் இலவசமாக அளிக்கும் பணி நடைபெறுகிறது. அந்த இயந்திரங்கள் அருகே செல்வோர், அடையாள அட்டையை முதலில் ஸ்கேன் செய்ய வேண்டும்.
பிறகு விருப்பமான அளவை குறிப்பிட்டதும், அதில் இருந்து வரும் முகக்கவசங்களை எடுத்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.